தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்துலுள்ள ஊராட்சி மன்றத் தலைவா்கள், துணைத் தலைவா்களுக்கு பொது நிதி மேலாண்மை பயிற்சி மற்றும் விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்தில், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாச சேகா் தலைமை வகித்து பயிற்சி அளித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பழகன் மற்றும் கௌரி ஆகியோா் முன்னலை வகித்து பேசினா்.
இதில், ஊராட்சி வரவு-செலவு கணக்குகள் கணினியில் பதிவு செய்து இணைய வழியில் பணப் பரிவா்த்தனைகளை எவ்வாறு மேற்கொள்வது மற்றும் அவசர செலவினங்களுக்கு மட்டும் காசோலையை பயன்படுத்துவது தொடா்பான விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி மற்றும் விளக்கக் கூட்டத்தில், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள், துணைத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.