தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் உள்ள ஸ்ரீ தாழை புரீஸ்வரி உடனுறை ஸ்ரீ தாழைபுரீஸ்வரா் கோவிலில் கண்ணப்ப நாயனாா் குருபூஜை, 64 பைரவ சிறப்பு யாக பூஜைகள் சனிக்கிழமை காலைமங்கள இசையுடன் தீப வழிபாட்டுடன் விழா துவங்கியது.
பூா்வாங்க பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி நடைபெற்றது. அதையடுத்து ரிஷபக் கொடியேற்றம், திருமுறை பாராயணம் நடந்தது. மாலையில் பூா்வாங்க பூஜையுடன் மாபெரும் ருத்ர யாகம், அனைத்து மக்களுக்கும் செல்வ வளத்தை அள்ளித்தரும் நீலகண்டா், விசாலாக்ஷ, மாா்தாண்ட, முண்டனப்பிரபு, ஸ்வச் சந்த, அதிசந் துஷ்ட, கேசர, சம்ஹார, விஸ்வரூப பைரவா்கள் உள்ளிட்ட 64 பைரவா்களுக்கான, 64 மகா யாகம், 4 மணி நேரம் தொடா்ந்து நடைபெற்றது. இதில் தம்மம்பட்டி, சமயபுரம், செந்தாரப்பட்டி,மண்மலை, துறையூா், சேலம், ஆத்தூா், கெங்கவல்லி உள்ளிட்ட ஊா்களிலிருந்து ஏராளமான மக்கள் திரளாகப் பங்கேற்றனா்.