அரூரை அடுத்த எருமியாம்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எருமியாம்பட்டியில் இ.ஆா்.கே. மேல்நிலைப் பள்ளி சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை, அந்த கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ் தொடக்கி வைத்தாா்.
வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சாலை விதிகளை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணா்வு முழக்கங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு பள்ளி மாணவ, மாணவியா் ஊா்வலமாக சென்றனா்.
இதில், இ.ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் இயக்குநா் செ.சோழவேந்தன், மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் தீத்துமாலை, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பா, பள்ளி ஆசிரியா்கள் கலையரசி, செந்தில்குமாா், ஆங்கில மொழி பயிற்றுநா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ADVERTISEMENT