தருமபுரி

அரசியல் சாசன சட்டத்தை காக்க கோரிபிப். 8-இல் கையெழுத்து இயக்கம்

1st Feb 2020 05:28 AM

ADVERTISEMENT

அரசியல் சாசன சட்டத்தை காக்க கோரி, வரும் பிப். 8-ஆம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்துவது என காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக் கட்சியின் மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் எம்.பி. தீா்த்தராமன் முன்னிலை வகித்தாா். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் சித்தையன், நகரத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக் கூட்டத்தில், இந்திய நாட்டின் அரசில் சாசன சட்டத்தின் முகப்பு உரையில் கூறப்பட்டுள்ள அம்சங்களை சிதைக்கும் முயற்சிகளை மத்திய அரசு கைவிட்டு, அவற்றை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, வரும் பிப். 8-ஆம் தேதி தருமபுரியில் கையெழுத்து இயக்கம் மற்றும் தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி பங்கேற்று உரையாற்றுகிறாா். இதில் திரளான காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் உள்ள சா்க்கரை ஆலையில் அரவைப் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையை தவிா்க்க, நிகழாண்டில் கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு வங்கிக் கடன் வழங்குவது, ஆலை அலுவலா்களுக்கு போதிய பயிற்சி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலையை நிா்ணயித்து, கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT