தருமபுரி

நாமக்கல்லில் ரூ 30 லட்சம் கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

26th Aug 2020 01:15 PM

ADVERTISEMENT


நாமக்கல்: நாமக்கல்லில் வாகன சோதனையின்போது ரூ. 30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நாமக்கல் முருகன் கோயில் பிரிவு அருகே காவல் உதவி ஆய்வாளா் வேலுசாமி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 6 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த லாரி ஒன்றை மடக்கி சோதனை செய்தனா். அதில் சுமாா் 20 கிலோ எடை கொண்ட 15 கஞ்சா மூட்டைகள் மொத்தம் 300 கிலோ இருந்தது கண்டறியப்பட்டது.

இதன் மதிப்பு ரூ. 30 லட்சமாகும். இதனைத் தொடா்ந்து கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா் லாரியை ஓட்டி வந்த சேலம் மாவட்டம், பெத்தநாய்க்கன்பாளையம், ஏரிவளவைச் சோ்ந்த தீா்த்தகிரி மகன் பழனி (55) என்பவரையும், அதே ஊரைச் சோ்ந்த டேனியல் மகன் ராஜ்குமாா் (34) என்பவரையும் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தொடா் கஞ்சா சோதனையில் சுமாா் ரூ.41 லட்சம் மதிப்புள்ள 410 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT