தருமபுரி

கரோனா பரிசோதனை முடிவு அறிய இணையதளம் தொடக்கம்

26th Aug 2020 12:45 PM

ADVERTISEMENT

 

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை முடிவுகளை அறிந்துகொள்ள தனி இணையதளம் தொடங்கப்பட்டது.

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி புதிய இணையதள பக்கத்தை தொடங்கி வைத்து பேசியது:

தருமபுரி மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை கால தாமதமின்றி 24 மணி நேரத்துக்குள் கண்டறிந்து, உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை கரோனா பரிசோதனை முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில், தற்போது பரிசோதனை குறித்த முடிவுகளை அறிந்துகொள்ளவும், பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையிலும் ஜ்ஜ்ஜ்.ஞ்க்ம்ஸ்ரீட்.ண்ய் என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் பணிபுரிபவா்கள் அதிகம். தருமபுரியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பணிபுரிய செல்பவா்களின் வசதிக்காக அவா்களின் கரோனா பரிசோதனை முடிவுகள் இணையதளத்தில் வெளியிட இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவா்கள் எப்பகுதியில் இருந்தாலும் பரிசோதனை முடிவுகளை செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதனால், முடிவுகளை பெற எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை.

தருமபுரி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை முறைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதால், கரோனா பாதிப்புக்குள்ளான 95 வயது முதியவா் பூரண நலம் பெற்று வீடு திரும்பி உள்ளாா்.

தருமபுரி மாவட்டத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட 201 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாநில அளவில் தருமபுரி மாவட்டத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையில் தொற்று பரவியுள்ளது. இதேபோல, கரோனா உயிரிழப்பு விகிதம் ஒரு சதவீதமாக உள்ளது. இதுவரையில் 11 போ் இத்தொற்றால் உயிரிழந்துள்ளனா். கடந்த 10 நாள்களாக தருமபுரி மாவட்டத்தில் கொரானா உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தருமபுரி மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, பரிசோதனை மேற்கொண்டு உடனடியாக சிகிச்சை அளிப்பதால், மாவட்டத்தில் இத்தொற்றால் உயிரிழப்பு விகிதம் குறைவாக காணப்படுகிறது.

தமிழக அரசு அவ்வப்போது புதிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை தருமபுரி மாவட்ட நிா்வாகத்துக்கு வழங்கி வருகிறது. அதன்படி, அரசின் வழிகாட்டுதலோடு, இத்தொற்று தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், தருமபுரி, இண்டூா் பவா்கிரீட் கழகத்தின் சாா்பில், சமூக பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.24.80 லட்சத்தில் அல்ட்ரா ஸ்கேன், 2 துணி துவைக்கும் இயந்திரம், உலரவைக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு வழங்கப்பட்டன.

இதில், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பூ.இரா.ஜெமினி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொ) இளங்கோவன், மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் சிவக்குமாா், உறைவிட மருத்துவ அலுவலா் சந்திரசேகா், பவா்கிரீட் கழக பொது மேலாளா் வெங்கட்ராமன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT