தருமபுரி

ஏழைக் குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

26th Aug 2020 12:43 PM

ADVERTISEMENT

அரூா்: வறுமையில் வாடும் ஏழை, எளிய குடும்பத்தினருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என இந்தியக் குடியரசுக் கட்சி (கவாய் பிரிவு) வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூரில் இந்தியக் குடியரசுக் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் என்.ராஜா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கரோனா தொற்று பரவுதை தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் இருப்பதால், ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடுகின்றனா். எனவே, வறுமையில் வாடும் ஏழைக் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்க வேண்டும். அரூா் வழியாக செல்லும் சேலம்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் பொதுக் கழிப்பிடக் கட்டடம் அமைக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சிறு வியாபாரிகளுக்கு கடனுதவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கட்சியின் மாநில பொதுச் செயலா் எம்.ராஜேந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளா் த.கா.முருகன், மாவட்டச் செயலா் பொன்.தனபால், மாவட்ட அமைப்பாளா் சோலை மு.துரைராஜ், ஒன்றியப் பொறுப்பாளா் வி.வெள்ளையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT