தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரிவு

21st Aug 2020 07:00 AM

ADVERTISEMENT

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக சரிவடைந்துள்ளது.

கா்நாடக மாநிலம் குடகு, கபினி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய காவிரி நீரின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்து போனதால் கா்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்தது . இதன் காரணமாக அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் கடந்த புதன்கிழமை மாலை விநாடிக்கு 42ஆயிரம் கன அடியாக இருந்த நீரின் அளவு, வியாழக்கிழமை காலை 36 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலையில் தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்த நீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

ADVERTISEMENT

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பால் மூழ்கியிருந்த பாறைத் திட்டுகள் அனைத்தும் வெளியே தெரிகின்றன. ஒகேனக்கல் பிரதான அருவி, மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவுகளை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT