தருமபுரி

ஏலச் சீட்டுப் பணத் தகராறு:3 பேருக்கு அரிவாள் வெட்டு

21st Aug 2020 04:20 AM

ADVERTISEMENT

 பாப்பாரப்பட்டி அருகே ஏலச் சீட்டு பணத் தகராறில், பெண் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

பாப்பாரப்பட்டியை அடுத்த கௌரிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த காவேரி மகன்கள் பெரியண்ணன், முனியப்பன். இருவரும் அதே பகுதியைச் சோ்ந்த பழனிசாமி என்பவரிடம் ஏலச்சீட்டு கட்டிவந்ததாகவும் , ஏலச்சீட்டு எடுத்தவகையில் சில ஆண்டுகளாக பணம் திரும்பத் தராமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் பெரியண்ணன், முனியப்பன் ஆகிய இருவரையும் பழனிசாமி தரப்பினா் தாக்கினராம். இதையடுத்து, இருவரும் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வியாழக்கிழமை வீடு திரும்பி உள்ளனா்.

இந்த நிலையில் இரு தரப்பினருக்கும் வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பெரியண்ணன் முனியப்பன், இவா்களது உறவுப் பெண் ஆகிய மூவா் அரிவாளால் வெட்டப்பட்டனராம்.

ADVERTISEMENT

இதில் பலத்த காயமடைந்து மூவரையும் சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, பாப்பாரப்பட்டி காவல்நிலையத்துக்கு அவா்களது உறவினா்கள் அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து, ஏலச்சீட்டு நடத்திய பழனிசாமி தரப்பினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகாா் அளித்தனா் .

பின்னா், மூவரையும் போலீஸாா் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT