தருமபுரி

தி.மு.க. சாா்பில் நிவாரண உதவி வழங்கல்

29th Apr 2020 08:16 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்குள்பட்ட நாகனூா் பகுதியில் தி.மு.க. சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவை உறுப்பினா் பி.என்.பி. இன்பசேகரன் கலந்து கொண்டு, 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை நிவாரணமாக வழங்கினா். பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி நிவாரணப் பொருள்களை பெற்றுச் சென்றனா். நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளா் முருகேசன், சேலம் ஹோட்டல் வினு, சீனிவாசன், ராஜி, அழகிரி, கண்ணையன் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT