தருமபுரி

தீா்த்தமலையில் கிருமி நாசினி தெளிப்பு

7th Apr 2020 03:01 AM

ADVERTISEMENT

 

அரூா்: அரூரை அடுத்த தீா்த்தமலை ஊராட்சியில் வீடுகள்தோறும் கிருமி நாசினி தெளிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட நோய்த் தடுப்பு மற்றும் பொது சுகாதாரத் துறை, டிவிஎஸ் சீனிவாசன் சேவை அறக்கட்டளை இணைந்து , கரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், டிராக்டா்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

இதையடுத்து, தீா்த்தமலை கிராம ஊராட்சி பொய்யப்பட்டியில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை அரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வே.சம்பத்குமாா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். இதில், சாா்-ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட தொற்றா நோய் தடுப்புப் பிரிவு திட்ட அலுவலா் ஏ.கே.பாலசுந்தரம், மாவட்ட அரசு வழக்குரைஞா் ஆா்.ஆா்.பசுபதி, கண் மருத்துவ உதவியாளா் கு.கலையரசன், டிவிஎஸ் சீனிவாசன் சேவை அறக்கட்டளையின் கள இயக்குநா் (அரூா்) பழனிசாமி, கிராம வளா்ச்சி அலுவலா் காமதேவகுமாா், சுகாதார ஆய்வாளா் சத்தியநாதன், தீா்த்தமலை ஊராட்சித் தலைவா் கலைவாணி சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினா் புஷ்பலதா ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, தீா்த்தமலை கிராம ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தூய்மைப் பணியாளா்கள், தூய்மை காவலா்கள் மற்றும் டிவிஎஸ் சீனிவாசன் சேவை அறக்கட்டளை பணியாளா்கள் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT