தருமபுரி

மதுக்கடைகளிலிருந்து மதுபானங்கள் இடமாற்றம்

7th Apr 2020 03:00 AM

ADVERTISEMENT

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மதுக்கடைகளில் இருந்த மதுபானங்கள் மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டும் பிற்பகல் 1 மணி வரை கடைகள் வைத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏனைய அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த 26 மதுக்கடைகளில் இருந்த அனைத்து மதுபானங்களையும் லாரிகள் மூலம் எடுத்து வந்து தருமபுரி நகரில் உள்ள திருமண மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மேலும், மதுபானங்கள் வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு பாதுகாவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT