தருமபுரி

விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

22nd Sep 2019 03:50 AM

ADVERTISEMENT


சரக அளவிலான விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் 4 தங்கப் பதக்கங்களும்,17 வெள்ளிப் பதக்கங்களும், 20 வெண்கலப் பதக்கங்கள் என 40 பதக்கங்கள் வென்று 88 வெற்றி புள்ளிகளுடன் சரக அளவில் இரண்டாவது ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற மாணவ, மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசன்,  உடற்கல்வி இயக்குநர் கேசவன், ஆசிரியர்கள் உமாசங்கர், புருசோத்தமன் ஆகியோரை பள்ளியின் தாளாளர் தருமன், நிர்வாக அலுவலர் மோகனப்பிரியா, மேலாளர் சக்திவேல் மற்றும் முதல்வர்கள் ரத்தினவேல், மணிகண்டன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT