தருமபுரி

மும்முனை மின்சார இணைப்புகளை விரைந்து வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்  

17th Sep 2019 10:05 AM

ADVERTISEMENT

அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் மும்முனை மின்சார இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
 அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் திறந்த வெளிக் கிணறு, ஆழ்துளைக் கிணறு உள்ளிட்ட விவசாய பணிகளுக்காக மும்முனை மின்சார இணைப்புகள் வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர்.
 இதில் விவசாயிகள் விண்ணப்பம் செய்து சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். அதேபோல், உடனடி மின் இணைப்புகள் பெறுவதற்காக ரூ. 2 லட்சம், ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ. 25 ஆயிரம் பணம் செலுத்தும் திட்டத்திலும் மும்முனை மின்சாரம் பெறுவதற்காக விவசாயிகள் பலர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
 ஆனால், பதிவு மூப்பு அடிப்படையில் மும்முனை மின்சார இணைப்புகள் முறையாக வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார் கூறுகின்றனர். எனவே, மின் இணைப்பு கோரியுள்ள விவசாயிகளுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் விரைந்து மின் இணைப்புகளை வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்பு.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT