தருமபுரி

இளைஞர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

13th Sep 2019 09:58 AM

ADVERTISEMENT

தருமபுரியில் தொலைத்தொடர்பு நிலையம் அருகே இளைஞர் காங்கிரஸ் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்துக்கு, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தீபன்குமார் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜாராம் வர்மா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பாடி நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை விடுதலை செய்ய வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சியை சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
 இதில், வர்த்தகர் பிரிவு மாவட்டத் தலைவர் எம்.மகேந்திரன், விவசாய அணி மாவட்டத் தலைவர் எம்.அன்பழகன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் காவேரியம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT