தருமபுரி

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 09:56 AM

ADVERTISEMENT

தருமபுரியில் மின்வாரிய ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கோட்டச் செயலர் ஜி.சக்திவேல் தலைமை வகித்தார். திட்டத் தலைவர் டி.லெனின் மகேந்திரன், துணைத் தலைவர் ஜி.பி.விஜயன், சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.நாகராஜன், மாநில துணைத் தலைவர் பி.ஜீவா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குழுவை அமைத்திட வேண்டும். கணக்கீட்டாளர்களுக்கு ஆண்டுயர்வை வழங்க வேண்டும். காலதாமதமின்றி கள உதவியாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT