தருமபுரி

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

7th Sep 2019 09:59 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் பா.ச.சண்முகம், கால்நடை ஆராய்ச்சியாளர் இரா.தங்கதுரை ஆகியோர் பேசினர். தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
இப் பயிற்சி முகாமில், நவீன முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு முறை, சூழலுக்கு ஏற்ப கோழி இனங்கள் தேர்வு, தீவன மேலாண்மை, கொட்டகை அமைப்பு முறை, விலங்கின புரதத்தின் அவசியம், கோழிக் குஞ்சுகளை உற்பத்தி செய்தல், சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 31 விவசாயிகள் கலந்துகொண்டனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT