தருமபுரி

அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைப்போர் மீது நடவடிக்கை: ஆட்சியர் சு.மலர்விழி

7th Sep 2019 09:56 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை (பேனர்) வைப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சு.மலர்விழி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால உத்தரவில், விளம்பரப் பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக, ஏற்கெனவே அமலில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் சட்ட விதிகள், தமிழக அரசு ஆணைகள், நெறிமுறைகள் மற்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் விளம்பரப் பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள் போன்றவற்றை முக்கியச் சாலைகளின் இருபுறங்கள், கடைவீதிகள், நடைபாதைகள் போன்ற இடங்களில் வைப்பதால் வாகன ஓட்டிகள், சாலைகளை பயன்படுத்துவோர் கவனத்தை திசைதிருப்புவதாகவும், பாதசாரிகளுக்கும் இடையூறாக உள்ளதால் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றத்தால்
உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் யாரும் வைக்கக் கூடாது. அதையும் மீறி அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைப்பவர்கள் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை (அ) ரூ.5 ஆயிரம் அபராதம் (அ) இரண்டும் தண்டனையாக வழங்க வழிவகை உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT