தருமபுரி

வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

4th Sep 2019 09:30 AM

ADVERTISEMENT

மோட்டார் வாகன விபத்து சட்டத்தை நடைமுறை படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி, தருமபுரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிகளை வழக்குரைஞர்கள் புறக்கணித்தனர்.
 தமிழகத்தில், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் நஷ்ட ஈடுகோரும் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என வழக்குரைஞர்கள் சமரசத் தீர்வு மையம், லோக் அதாலத் ஆகியவற்றில் கலந்து கொள்வதில்லை என்பதை வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கருணாநிதி, செயலர் அழகமுத்து ஆகியோர் தலைமையில் 350 வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதேபோல், அரூரில், 120, பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டியில் தலா, 40, பென்னாகரத்தில் 30 என மாவட்டம் முழுவதும், மொத்தம், 580 வழக்குரைஞர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT