தருமபுரி

செப்.6 இல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

4th Sep 2019 09:33 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற செப்.6 - ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
 இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற செப்.6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப் பணியே ஆகும். இதன் மூலம் தனியார்துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்புப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் தங்களது பதிவு ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று அச்சப்பட வேண்டியதில்லை.
 இம் முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், மேற்பார்வையாளர், மேலாளர், கணினி இயக்குபவர், தட்டச்சர், கணக்கர், காசாளர், பழுது நீக்குநர் போன்ற பணிகளுக்கு பட்டயம், பட்டப் படிப்பு, பள்ளிப் படிப்பு மற்றும் அனைத்துவித கல்வித் தகுதிக்கும் ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
 எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அன்றைய தினம் காலை 10 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
 
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT