தருமபுரி

கிருஷ்ணாபுரத்தில் சிசிடிவி கேமரா பொருத்தம்

4th Sep 2019 09:30 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் செவ்வாய்க்கிழமை பொருத்தப்பட்டன.
 கிருஷ்ணாபுரம் பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் 10 சிசிடிவி கேமராக்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இக்கேமராக்களை பொருத்தி அதன் இயக்கத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன் தொடக்கி வைத்தார்.
 நாய்க்கன்கொட்டாயில் உள்ள நக்ஸல்கள் நினைவிடம் மற்றும் பேருந்து நிறுத்தம், கிருஷ்ணாபுரம், திப்பம்பட்டி சந்திப்பு சாலை என முக்கிய 10 இடங்களில் இக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இவற்றின் இணைப்பு அந்தப் பகுதியில் கணினி மற்றும் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோரது செல்லிடப்பேசிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேமராக்களின் வழியாக திருட்டு, வழிப்பறி, வாகன விபத்துகள் மற்றும் இதர குற்றச் செயல்களை கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
 இதில், காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜ்குமார், காவல் ஆய்வாளர் ராஜ சோமசுந்தரம், காவலர்கள் கலந்துகொண்டனர்.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT