தருமபுரி

அரசுப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

4th Sep 2019 09:33 AM

ADVERTISEMENT

அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 உணவுத் திருவிழாவை பள்ளித் தலைமை ஆசிரியை கே.செல்வராணி தொடக்கி வைத்தார். விழாவில், நமது முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய உணவு வகைகள், சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள், கீரைவகைகள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர். தொடர்ந்து, பாரம்பரிய உணவு வகைகளை சமையல் செய்து பள்ளி மாணவர்களுக்கு வழங்கினர்.
 கீரைகள், இயற்கை உணவுகள், சிறு தானியங்களின் பயன்பாடுகள், நமது முன்னோர் பயன்படுத்திய உணவு வகைகள், பாரம்பரிய உணவு வகைகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கருத்துரைகளை வழங்கினர். இதில், பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பி.எட் படிக்கும் மாணவ ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT