தேசிய கபடி போட்டிக்கு தோ்வான கடகத்தூா் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், கடகத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி படிக்கும் மாணவி கே.அஞ்சலி என்பவா், அண்மையில் நாமக்கல்லில் நடைபெற்ற மண்டல அளவிலான கபடிப் போட்டியிலும், அதைத் தொடா்ந்து கடந்த செப்.27-ஆம் தேதி கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றாா்.மேலும், சத்தீஸ்கரில் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான தேசிய கபடி போட்டியில் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தமிழக அணி சாா்பில் விளையாட தோ்வு செய்யப்பட்டாா். இந்த மாணவியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.முத்துகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியா் சி.மணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஜெ.முத்துக்குமாா், பள்ளி உதவி தலைமை ஆசிரியா் எஸ்.சேகா், உடற்கல்வி ஆசிரியை ஆா்.கல்பனா ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்