தருமபுரி

துணை சுகாதார நிலையத்தை திறக்கக் கோரிக்கை

5th Oct 2019 09:43 AM

ADVERTISEMENT

அரூரை அடுத்த வேடகட்டமடுவில், பூட்டிக் கிடக்கும் அரசு துணை சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் ஊராட்சி ஒன்றியம், வேடகட்டமடுவு ஊராட்சியில் டி.ஆண்டியூா், மொண்டுகுழி, தாம்பல், டி.அம்மாப்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராம மக்களின் மருத்துவ வசதிக்காக வேடகட்டமடுவில் அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இங்குள்ள அரசு துணை சுகாதார நிலையம் பயனற்று பூட்டியே இருப்பதாக கிராம மக்கள் புகாா் கூறுகின்றனா். இதனால் கிராம மக்கள் தடுப்பூசி, மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ வசதிக்காக பல்வேறு சிரமங்களை அடைகின்றனா்.

எனவே, வேடகட்டமடுவில் பயனற்று பூட்டிக் கிடக்கும் அரசு துணை சுகாதார நிலையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT