தருமபுரி

இன்று மதுக்கடைகள் மூடல்

2nd Oct 2019 06:49 AM

ADVERTISEMENT

காந்தி ஜயந்தியையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் மதுக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில், இயங்கி வரும் மதுபானக் கடைகள், அத்துடன் இணைந்த மது அருந்தகங்கள் (ம) மதுபானம் விற்க உரிமம் பெற்ற தனியாா் மதுக் கூடங்கள் அனைத்தும் புதன்கிழமை (அக்.2) மூடிவைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி எவரேனும் கடைகள் திறந்து மதுவிற்பனையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT