தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டியில் எம்.பி. செந்தில்குமாா் நன்றி தெரிவிப்பு

1st Oct 2019 10:04 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் நன்றி தெரிவித்தாா்.

பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், பில்பருத்தி, பண்டாரசெட்டிப்பட்டி, நடூா், குப்பனூா், கொட்டாவூா், வடசந்தையூா், தென்சந்தையூா், முஸ்லீம் நகா், துரிஞ்சிப்பட்டி, பி.பள்ளிப்பட்டி, அஜ்ஜம்பட்டி, லூா்துபுரம், பையா்நத்தம், கதிரிபுரம், போதக்காடு, மோளையானூா், தேவராஜபாளையம், அதிகாரப்பட்டி, மாரியம்பட்டி, அ.நடூா், அ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசினாா். அப்போது, பொதுமக்கள் வரவேற்பு அளித்து, சாலை, குடிநீா் வசதி, பொதுக் கழிப்பிடம், ஊரக வேலையளிப்பு உறுதித் திட்டத்தில் பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனா். இதில், ஒன்றியச் செயலா் இரா. சித்தாா்த்தன் மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT