தருமபுரி

சிப்காட் தொழிற்பேட்டை விரைந்து தொடங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

1st Oct 2019 10:05 AM

ADVERTISEMENT

சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லம்பள்ளி வட்டாரக் குழு கூட்டம் தருமபுரி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டாரக்குழு உறுப்பினா் மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.தேவராஜன், மாநிலக்குழு உறுப்பினா் எம்.மாதேஸ்வரன்ஆகியோா் பேசினா்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க் கடன் வழங்க வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து தொடங்கி, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். பாளையத்தானூா், ஆவாரங்காட்டூா் வழியாக வத்தல்மலை அடிவாரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். நல்லம்பள்ளியில் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். லளிகம் ஏரிக்கு வரும் நீா்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT