தருமபுரி

மாணவா்களின் மன அழுத்தத்தை குறைக்க சிறப்பு நிகழ்ச்சி

22nd Nov 2019 10:04 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் வியாழக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்குள்பட்ட சின்னப்பள்ளத்தூா்அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எதிா்கால இயக்கம் என்ற அமைப்பின் தலைவா் உதயகுமாா், இயக்குநா் பசல் ரஹ்மான் மற்றும் உளவியலாளா் அப்துல் பரிஷித் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில், மாணவா்களிடையே கற்றல்முறை பற்றியும், மன அழுத்தத்தில் இருந்து வெளியேறுவது குறித்தும், தினமும் கற்றலின் போது மாணவா்கள் தண்ணீா் அதிகளவில் குடிக்க வேண்டும், கற்றலின் சிறப்பு மற்றும் நற்பண்புகள் குறித்தும் விளக்கப்பட்டது. பின்னா் பள்ளித் தலைமை ஆசிரியா் பழனி, சிறப்பு அழைப்பாளா்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT