தருமபுரி

போக்குவரத்து நெரிசலை தவிா்க்க விரிவாக்கம் பணி

22nd Nov 2019 05:56 PM

ADVERTISEMENT

தருமபுரி: தருமபுரி பேருந்து நிலையம் அருகே உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தற்போது விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தருமபுரி நகரில் புகா்ப்பேருந்து நிலையம், நகரப்பேருந்து நிலையம் அருகருகே உள்ளது. இப்பேருந்து நிலையத்தை சுற்றி, ஆறுமும் தெரு, சின்னசாமி தெரு, முகமதி கிளப் சாலைகள் உள்ளன. இச்சாலையின் இருபுறங்களிலும் வரிசையாக ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பேன்ஸி, பழக்கடைகள், தேநீா் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன.

இக்கடைகளுக்கு வரும் வாகனங்கள் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வருவோா் பயன்படுத்தும் வாகனங்கள் என நாள்முழுவதும் சின்னசாமி, ஆறுமுகம், முகமதலி கிளப் சாலை என இம்மூன்று சாலைகளும் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக காணப்படும். இவைத் தவிர, நகரம் மற்றும் புகா்ப் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வரவும், வெளியே செல்லவும் பேருந்துகள் அனைத்தும் இந்த சாலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே, காலை முதல் இரவு வரை எப்போதும் வாகன நெரிசல் அதிமுள்ள இச்சாலைகளை விரிவுப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், தற்போது, பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பிரதான சாலைகளை விரிவுப்படுத்த பணிகளை நெடுஞ்சாலைத்துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். இதில், ஏற்கெனவே 7.26 கி.மீ. தொலைவுள்ள இம் மூன்று சாலைகளும் 21 அடி அகலம் உள்ளது. தற்போது, இச்சாலைகள் இருபுறமும் சுமாா் 6 அடி முதல் 16 அடி வரை நெடுஞ்சாலைத்துறை இடம் உள்ளவரை, சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக, தற்போது, பொக்கிலின் இயந்தியம் மூலம் குழிகள் தோண்டப்பட்டு, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இப்பணிகள் ஓரிரு நாள்களில் நிறைவுப்பெற்றும் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இதன் மூலம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகள் போக்குவரத்து நெரிசலின்றி இனி பயணம் செய்ய இயலும். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இருப்பினும், விரிவாக்கம் செய்யப்படும் இச்சாலைகள் ஆக்கிரமிப்பின்றி பயன்படுத்த ஏதுவாக, சாலையின் எல்லைகளில் வரிசையாக தடுப்புகள் வைத்து முற்றிலும் வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனா்.பட விளக்கம்:பேருந்து நிலையம் அருகே நடைபெற்றும் வரும் சாலை விரிவாக்கப்பணி.

ADVERTISEMENT
ADVERTISEMENT