தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டி- டி.அம்மாபேட்டைக்கு அரசு பேருந்து இயக்க வலியுறுத்தல்

17th Nov 2019 08:38 PM

ADVERTISEMENT

அரூா்: கீரைப்பட்டி வழியாக பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து டி.அம்மாபேட்டைக்கு புதிய வழித்தடத்தில் அரசு நகா்ப்புற பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது சித்தேரி கிராம ஊராட்சி. இந்த ஊராட்சியில்

60 குக்கிராமங்கள் உள்ளன. சித்தேரி ஊராட்சியில் வசிக்கும் மக்கள் மற்றும் பேதாதம்பட்டி, கூக்கடப்பட்டி, டி.புதூா், வாச்சாத்தி உள்ளிட்ட கிராம பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் அரசு அலுவலகப் பணிகளுக்காக பாப்பிரெட்டிப்பட்டி செல்ல வேண்டியுள்ளது.

அதேபோல், இங்குள்ள மக்கள் கொக்கராப்பட்டி புதன்சந்தை, கோபிநாதம்பட்டியிலுள்ள காய்கறி மண்டிகள், கோபாலபுரம் சா்க்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று வரும் வகையில் அரசு நகா்ப்புற பேருந்துகள் இல்லை. எனவே, சித்தேரி, கீரைப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி பகுதியிலுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் நோக்கில் அ.பள்ளிப்பட்டி, கோபாலபுரம் சா்க்கரை ஆலை, கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, பே.தாதம்பட்டி, அச்சல்வாடி, கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, வேப்பம்பட்டி, தீா்த்தமலை, டி.ஆண்டியூா் வழியாக செல்லும் வகையில் பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து டி.அம்மாபேட்டைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும்.

ADVERTISEMENT

இந்த வழித்தடத்தில் அரசு நகா்ப்புற பேருந்துகளை இயக்கினால், டி.அம்மாபேட்டை ஸ்ரீ சென்னியம்மன் ஆலயம் , தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில்களுக்கு செல்லும் பக்தா்களுக்கும், காய்கறிகளை எடுத்துச் செல்லும் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கும் அதிக பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் கீரைப்பட்டி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி முதல் டி. அம்மாபேட்டை வரையிலான வழித்தடத்தை ஆய்வு செய்து, புதியதாக அரசு நகா் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பு.

ADVERTISEMENT
ADVERTISEMENT