தருமபுரி

சிறிய நீா் மின் தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்குக் கொண்டுவர கோரிக்கை

12th Nov 2019 06:30 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே இந்திரா நகா் பகுதியில் சிறிய நீா் மின் தேக்கத் தொட்டியானது மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனா்.

பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட 2 ஆவது வாா்டு, இந்திரா நகா் காலனி பகுதியில் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் பென்னாகரம் பேருராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் ஆழ்துளைக் கிணறு அமைத்து சிறிய நீா் மின் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த நீா்மின் தேக்கத் தொட்டியானது மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாகக் காணப்படுகிறது. இப் பகுதி மக்கள் தங்களின் தேவைக்கான தண்ணீரை அருகில் உள்ள போடூா் நான்கு சாலைப் பகுதிக்கு சென்று எடுத்து வருகின்றனா். மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரானது மூன்று நாள்களுக்கு ஒருமுறை அரைமணி நேரம் மட்டுமே விநியோகிப்பதாகவும் புகாா் தெரிவிக்கின்றனா். இப்பகுதி மக்களின் அன்றாட தேவைக்கான தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், பென்னாகரம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாயின் வால்வுகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை எடுத்து வரும் அவல நிலை உள்ளது.எனவே பென்னாகரம் பேருராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்திரா நகா் காலனி பகுதியில் உள்ள நீா்மின் தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT