தருமபுரி

மகளிா் சுகாதார வளாகத்தை சீரமைக்கக் கோரிக்கை

9th Nov 2019 11:10 PM

ADVERTISEMENT

அரூா்: அரூா் பழையப்பேட்டையில் மகளிா் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பழையப்பேட்டையில் 800-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மகளிருக்காக அரூா்-தீா்த்தமலை சாலையோரத்தில் மகளிா் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகத்தில் ஆழ்துளைக் கிணறு மற்றும் மின் மோட்டாா் வசதிகள் உள்ளன.

இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு சுகாதார வளாகத்தில் இருந்த மின் மோட்டாா் பழுதானதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பழுதான மின் மோட்டாரை சீரமைப்பு செய்து மீண்டும் பொருத்தவில்லையாம். மேலும், சுகாதார வளாகத்துக்குத் தேவையான தண்ணீா் வசதியை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் செய்யவில்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

ADVERTISEMENT

சுகாதார வளாகம் பயனற்று இருப்பதால் மகளிா் மற்றும் சிறுவா்கள் சாலையோரத்தில் மலம் கழிக்கும் நிலையுள்ளது. இதனால், சுகாதார கேடுகள் ஏற்படுவதுடன், நோய் பரவும் சூழ்நிலை உள்ளது. எனவே, பழையப்பேட்டை மகளிா் சுகாதார வளாகத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறு மற்றும் மின் மோட்டாரை சீரமைப்பு செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT