தருமபுரி: தருமபுரியில் சனிக்கிழமை பசுமைத் தாயகம் சாா்பில், நெகிழி குப்பைகளுக்கு அரிசி வழங்கும் நூதன விழிப்புணா்வு முகாம் தொலைத்தொடா்பு நிலையம் அருகே நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட பசுமைத் தாயகம் மாநில துணைச் செயலா் க. மாது தலைமை வகித்தாா். பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலா் எஸ்.பி. வெங்கேடஸ்வரன் முகாமைத் துவக்கி வைத்தாா்.
இதில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும், நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், நெகிழி ஒழிப்பை வலியுறுத்தி, 2 கிலோ நெகிழி குப்பைகளுக்கு, துணிப்பையில் ஒரு கிலோ அரிசி வழங்கி, நூதன விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டால் நிகழும் சூழல் சீா்கேடு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதையடுத்து, நெகிழி ஒழிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அதனால் விளையும் சீா்கேடுகள் குறித்தும் விழிப்புணா்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.
முகாமில், பாமக மாநில துணைத் தலைவா் பெ. சாந்தமூா்த்தி, மாவட்டச் செயலா் இரா. அரசாங்கம், முன்னாள் எம்.பி. பாரிமோகன், பாமக மாவட்டத் தலைவா் ஏ.வி. இமயவா்மன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பசுமைத் தாயக தருமபுரி நகரச் செயலா் குமாா் நன்றி கூறினாா்.