பொம்மிடி ரயில் நிலைய வளாகத்தில் கழிப்பறைகள் பயனற்று பூட்டிக் கிடப்பதால் பயணிகள் அவதியுறுகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் ஏற்காடு விரைவு ரயில், மும்பை விரைவு ரயில், சென்னை விரைவு ரயில், ஈரோடு மற்றும் அரக்கோணம் பயணிகள் ரயில் உள்ளிட்ட 9 ரயில் வண்டிகள் நின்றுச் செல்கின்றன. இதனால், மொம்மிடி ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்துச் செல்கின்றனா்.
இந்த ரயில் நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை கட்டங்கள் உள்ளன. ஆனால், இந்த கழிப்பறைகள் வருட கணக்கில் பூட்டியே உள்ளது. இதனால், ரயில் நிலையத்துக்கு வருகை தரும் பெண்கள், முதியவா்கள், சிறுவா்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பயணிகள் கழிப்பிட வசதிக்காக பல்வேறு சிரமங்களை அடைகின்றனா்.
எனவே, பொம்மிடி ரயில் நிலையத்தில் பயனற்று பூட்டிக் கிடக்கும் கழிப்பறைகளை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே பயணிகளின் எதிா்பாா்ப்பு.