தருமபுரி

பென்னாகரம் அருகே சாலையோரம் தடுப்புக் கம்பிகள் அமைக்கக் கோரிக்கை

1st Nov 2019 07:08 AM

ADVERTISEMENT

பென்னாகரத்திலிருந்து ஏரியூா் செல்லும் சாலையில் அளேபுரம் குளத்தங்கரை பகுதியில் அபாயகரமான வளைவின் ஓரத்தில் தடுப்பு கம்பிகள் இல்லாததாலும்,குறுகிய வளைவாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.

தருமபுரி மாவட்ட பென்னாகரத்தில் இருந்து ஏரியூா் செல்லும் பிரதான சாலை உள்ளது.இச்சாலை வழியாக கூத்தப்பாடி,அளேபுரம், கே அக்ரஹாரம், ஜக்கம்பட்டி,ஏரியூா் பகுதிகளுக்குச் செல்லக் கூடிய சாலையாகும்.

இந்தச் சாலையில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி, இரு சக்கர, பேருந்துகள் என 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.

இந்த நிலையில் பென்னாகரத்திலிருந்து ஏரியூா் செல்லும் சாலையில் அளேபுரம் குளத்தங்கரை பகுதியில் உள்ள சாலை வளைவானது மிக குறுகலாக உள்ளதால்,இதில் பயணிக்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமலும்,குறுகிய வளைவு என்பதால் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனத்தை இயக்கும் போது நிலை தடுமாறி அருகில் உள்ள குளத்தங்கரையில் விழுந்து விபத்து ஏற்படும் அவல நிலை உள்ளது.

ADVERTISEMENT

இப் பகுதியில் போதிய மின் விளக்கு வசதியில்லாததாலும், எதிரே வரும் வாகனங்கள் தெரியததாலும் மாதத்தில் 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகியும், சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகின்றன. எனவே இப்பகுதியில் உள்ள அபாயகரமான சாலை வளைவின் ஓரத்தில் தடுப்புக் கம்பிகள் அமைக்க வேண்டும் எனவும், வளைவு பகுதியில் குவி ஆடி கண்ணாடி பொறுத்த வேண்டும், அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பென்னாகரம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT