பி.பள்ளிப்பட்டியில் கெபி திருவிழா

பொம்மிடி அருகேயுள்ள பி.பள்ளிப்பட்டியில் 2 நாள்கள் கெபி திருவிழா நடைபெற்றது.


பொம்மிடி அருகேயுள்ள பி.பள்ளிப்பட்டியில் 2 நாள்கள் கெபி திருவிழா நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி.பள்ளிப்பட்டியில் புனித லூர்து அன்னை கெபி கோயில் உள்ளது. இந்த திருக்கோயிலில் கெபி திருவிழா ஏப்-25 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் சனிக்கிழமை விடியற்காலை 5 மணி வரையிலும், புனித லூர்து அன்னை மலைக்குன்றின் மீது மாசற்ற ரத்தம் எனும் தலைப்பில் யேசுவின் வாழ்க்கை வரலாறு குறித்த நாடகம் நடைபெற்றது.
இந்த விழாவில் 55 நாடக மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 555 நாடக கலைஞர்கள் பங்கேற்று, பைபிள் நிகழ்வுகளை நாடகமாக நடித்தினர். விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், பெங்களூரு, ஆந்திரம், கேரளத்திலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகள் பங்குதந்தை சக்கர யாஸ், செயலர் ஜான் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக பி.பள்ளிப்பட்டியில் நடைபெற்ற கெபி திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com