சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.


அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 14-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை சீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தில் சாலைகள் அமைப்பதற்காக சின்னாங்குப்பம், எல்லப்புடையாம்பட்டி, பேதாதம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமச் சாலைகளில், திட்ட மதிப்பீடுகள் குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த திட்டத்தில் தார்ச் சாலை அமைத்தல், மண் சாலை அமைத்தல், சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறுவதில் மாதக் கணக்கில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இன்னும் ஓரிரு மாதங்களில் பருவ மழைக்காலம் தொடங்கி விடுவதால் சாலை அமைக்கும் பணிகள் பாதிக்கும்.
எனவே, கிராமப் பகுதியிலுள்ள சாலைகள் சீரமைப்பு பணிகளுக்காக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் கூடுதல் வேலை ஆள்களை நியமனம் செய்து, விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com