தருமபுரி

முயல் வேட்டை: முதியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

31st Jul 2019 08:55 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி அருகே முயல் வேட்டையில் ஈடுபட்டதாக முதியவருக்கு வனத்துறையினர் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
 பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை வனப்பகுதியில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, மொரப்பூர் வனச்சரகர் தீ.கிருஷ்ணன் தலைமையிலான வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் முதியவர் ஒருவர் கம்பி வலைகள் வைத்து முயல் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில் அவர் தென்கரைக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் (67) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணனை கைது செய்த வனத்துறையினர் தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, வனவிலங்குகளை வேட்டையாடும் முயற்சியில் ஈடுபட்ட குற்றத்துக்காக கிருஷ்ணனுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT