தருமபுரி

தேர்வில் சிறப்பிடம்: சோலைக்கொட்டாய் மாணவர்களுக்கு பாராட்டு

31st Jul 2019 08:55 AM

ADVERTISEMENT

தருமபுரி அருகேயுள்ள சோலை அரசுப் பள்ளியில் தேர்வில் சிறப்பிடம் வகித்த மாணவர்களை பாராட்டி தருமபுரி ஆயுள் காப்பீட்டுக் கழக கிளை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜா அண்ணாமலை தலைமை வகித்தார். எல்ஐசி முதுநிலை மேலாளர் எஸ்.வெங்கடேசன், தேர்வுகளில் சிறப்பிடம் வகித்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கி ஆயுள் காப்பீட்டுக் கழக திட்டங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார். விழாவில், எஸ்ஐசி முகவர்கள் பெ.வீரமணி, சி.முனிராஜ், பெற்றோர்- ஆசிரியர் கழத்தினர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT