தருமபுரி

ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

30th Jul 2019 08:59 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள கரடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவரின் மகன் பிரபு (25). இவர் ஒசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பிரபு, தனது நண்பர்களுடன் திங்கள்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்துள்ளார். ஒகேனக்கலில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கோத்திக்கல் பகுதியில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமானப் பகுதிக்குச் சென்றுவிட்டதால், எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் மூழ்கி பிரபு உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஒகேனக்கல் போலீஸார், தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT