பணி நேரத்தில் வெளியே சென்ற ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கக் கோரி, நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,200 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இங்கு, தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் 59 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப் பள்ளிக்கு, கடந்த 24-ஆம் தேதி சென்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி ஆய்வு செய்தார். அப்போது, பணி நேரத்தில் ஆசிரியர்கள் 11 பேர் வெளியில் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியர்களிடம் வேலைநேரத்தில் வெளியில் சென்றது ஏன்? என விளக்கம் கோரி, நோட்டீஸ் அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். அதனடிப்படையில், அந்த ஆசிரியர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வழியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.