தருமபுரி

வள்ளிமதுரை நீர்த்தேக்கத்தில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி தீவிரம்

22nd Jul 2019 10:46 AM

ADVERTISEMENT

அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக்கத்தில் மூழ்கிய இளைஞரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
அரூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மீன் சுந்தரம் மகன் காளிமுத்து (22). இவர், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், இளைஞர்கள் சிலர் வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக்கத்தில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுடன் குளித்துக் கொண்டிருந்த காளிமுத்து காணவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் காளிமுத்துவை தேடி வருகின்றனர். அரூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழகு நிலைய பெண் ஊழியர் கொலை வழக்கில் கணவர் கைது
ஒசூர்,ஜூலை 21: சூளகிரியில் அழகு நிலைய பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர். 
விழுப்புரம் மாவட்டம், வட பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி சாந்தி (33). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இளையராஜா சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சாந்தி சூளகிரியில் பேரிகை சாலையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, சூளகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலை செய்து வந்தார். 
அவரது குழந்தைகள் 2 பேரும் பொன்பரப்பில் உள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு சூளகிரிக்கு வந்த இளையராஜாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில்,  சாந்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். வழக்குப் பதிந்த போலீஸார் இளையராஜாவை தேடி வந்தனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில் இருந்த இளையராஜாவை சூளகிரி போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தன்னுடன் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்த மடத்தூரைச் சேர்ந்த சேட்டுவுக்கும் (35) தனது மனைவிக்கும் தொடர்பு இருந்தது. இதை கண்டித்தும் அவர்கள் தங்களது உறவைத் தொடர்ந்தனர். எனவே, மனைவியைக் கொலை செய்ததாக தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT