தருமபுரியில் திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் ஜி.வி.மாதையன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பெ.சுப்பிமணி எம்.எல்.ஏ, பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ, துணைச் செயலர் சூடப்பட்டி டி.சுப்பிரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை வெற்றிபெற உழைப்பது, மாநில இளைஞரணி செயலராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்தமைக்கு நன்றி தெரிவிப்பது, தருமபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.