இந்து கோயில்களில் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, தருமபுரியில் இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவர் என்.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ.ஐ.ராஜு, துணைத் தலைவர் பி.முரளி, மாநில பேச்சாளர் ஜெ.கி.கேசவப்பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், இந்து கோல்களில் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.