பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர், தலைமைக் காவலர்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
இதையடுத்து காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்கள் தங்குவதற்காக, அ.பள்ளிப்பட்டி-பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் அடுக்குமாடி காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்பு வளாகம் முள்செடிகள் மற்றும் குப்பைகளுடன் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. அதேபோல், காவலர் குடியிருப்பு வளாகத்தில் சுற்றுச்சுவர் வசதியில்லை. இதனால் காவலர் குடியிருப்பு வளாகத்தில் கால்நடைகள் சுற்றித் திரியும் நிலையுள்ளது.
எனவே, அ.பள்ளிப்பட்டியில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தை தூய்மை செய்ய வேண்டும். காவலர் குடியிருப்பு பகுதியில் சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும் என்பதே காவல் துறையினரின் கோரிக்கையாகும்.