தருமபுரி

கடத்தூர் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை

12th Jul 2019 09:40 AM

ADVERTISEMENT

கடத்தூர் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 
இதுகுறித்து கடத்தூர் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் (பொ) க.சிவகுருநாதன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டம், கடத்தூரில் இயங்கி வரும் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பிளஸ் 2 தொழிற்கல்வி, 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டாண்டு ஐடிஐ படித்தவர்களுக்கு நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெற உள்ளது.
அதேபோல, 10 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு 3 ஆண்டுகால பட்டயப் படிப்புக்கான (டிப்ளமோ) மறு சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 19-இல் நடைபெறும். கலந்தாய்வு இப்பயிலக வளாகத்திலுள்ள கலையரங்கத்தில் நடைபெறும். மாணவர் மற்றும் மாணவியருக்கு பாதுகாப்பான தனித்தனி விடுதி வசதிகள் உள்ளன. எனவே, இக்கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை பெற்று பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT