தருமபுரி

ஜூலை 9-இல் மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு முகாம்

6th Jul 2019 09:35 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் வரும் ஜூலை 9-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாபு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வரும் ஜூலை 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, இக் கூட்டத்தில், அப்பகுதி மாற்றுத் திறளாளிகள் பங்கேற்று, தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT