தருமபுரி

நகராட்சி கழிவறையில் வைக்கப்பட்ட வாழை இலைகள்

4th Jul 2019 09:46 AM

ADVERTISEMENT

தருமபுரி நகராட்சி கழிவறையில் வாழை இலைகள் வைக்கப்பட்டிருப்பதாக விடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி நேதாஜி புறவழிச் சாலையில் பச்சையம்மன் கோயில் அருகே நகராட்சி இலவச நவீன கழிவறை உள்ளது.
தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இக் கழிவறையின் உள்ளே விழாக்களின்போது, உணவு உண்பதற்கு பயன்படுத்தும் வாழை இலைகள் கட்டுக்கட்டாக புதன்கிழமை சிலர் அடுக்கி வைத்துச் சென்றுள்ளனர். கழிவறையில் சுகாதாரமற்ற சூழலில் இலைகள் வைக்கப்பட்டிருக்கும் விடியோ காட்சிகள் உடனே கட்செவி அஞ்சல் குழுக்களில் பரவியது. விடியோ காட்சிகளைப் பார்த்தவர்கள் உண்பதற்கு பயன்படுத்தும் இலைகளை கழிப்பறையில் ஏன் வைத்தனர்?  என சமூக வலைதளங்களில் கேள்வியும் எழுப்பினர்.
இக் காட்சிகள் பல்வேறு குழுக்களில் வேகமாகப் பரவிய நிலையில் சிறிது நேரத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த வாழை இலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இதுகுறித்து, கழிப்பறையைப் பராமரிக்கும் பெண் கூறியதாவது: கோயில் திருவிழாவுக்காக வாழை இலையைக் கொண்டு வந்தவர்கள் கழிப்பறையின் உள்ளே வைத்திருந்தனர். சிறிது நேரத்தில் அதை எடுத்துச் சென்றுவிட்டனர் என்றார்.
இது தொடர்பாக, நகராட்சி ஆணையர் ரா. மகேஸ்வரி கூறியது: நகராட்சி கழிவறையில் வாழை இலைகளை வைத்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT