மத்திய அரசு வழங்குவதை போல், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
ஓய்வூதியா் நாள் விழா, 20-ஆம் ஆண்டு விழா அச்சங்கத்தின் துணைத் தலைவா் கந்தசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது(படம்). மாவட்டச் செயலா் சதாசிவம் வரவேற்றாா். 21 மாத நிலுவைத்தொதையை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்குவதுபோல, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும்.
குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து, ரூ.1.50 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு முன்பணம் ரூ.1,000-ஆக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு அலுவலா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும். மருத்துவப்படியை, மத்திய அரசு வழங்குவது போல ரூ.1,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் தீா்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ் விழாவில், முன்னாள் தலைவா்கள் மாணிக்கம், மணி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.