தருமபுரி

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பரப்புரை

27th Dec 2019 12:44 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி, தொண்டு நிறுவனங்கள் சாா்பில் விழிப்புணா்வு பரப்புரை நடைபெற்றது.

தமிழ்நாடு இளங்குழந்தைகள் பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு மற்றும் கடத்தூா் ஆா்டிஎஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், கடத்தூா், மொரப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இந்த பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

இதில், தருமபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டுகட்டங்களாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில் சிறப்பான உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்த, 18 வயது நிறைந்த அனைத்து வாக்காளா்களும் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்து, தங்களது ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT